Tuesday 22 July, 2008

சுகுமாரனின் ஒப்பாரி என்னையும் அழ வைத்தது

இனத்தைக் கடந்து மொழியைக் கடந்து வாழ்க்கையின் உயிர் நூலினை பிடித்து சொல் பூக்களால் மாலையாக்கி மனம்விசி நெகிழச் செய்த சுகுமாரனுக்கு வாழ்த்துக்கள் நெஞ்சில் இருந்து . மலையாளியான பாபு ராஜ் தமிழனுக்கு ஒன்றும் சொல்லிவிடவில்லை. ஆனால் மனிதனாகிய பாபு ராஜ் தமிழ்னாகிய மனிதனுக்கு சொல்லிச்சென்றது கடலினும் பெரியது; வானினும் உயர்ந்தது; நிலத்தினும் வலியது. சுகுமாரன் தீட்டிய பாபு ராஜ் ஓவியம் போராடுகிறது; அழுகிறது; சுவைக்கிறது; உவகைக் கொள்கிறது; மௌனமாகிறது நம்மையும் மௌனமாக்குகிறது.


கடலே ........ நிலக் கடலே
சுகுமாரன் . உயிர்மை ஜுலை 08

Tuesday 8 July, 2008

முதல் கனவு

என் முதல் கனவு


எனக்கு இல்லை நினைவு



தூங்கும் குழந்தை ஒன்று


தூக்கத்தில் சிரிக்கவும்


அம்மாவோ பாட்டியோ


சொன்ன விளக்கம் அன்று;



கனவில் சாமி தோன்றி


குழந்தையுடன் விளையாட


குழந்தை சிரிக்கிறது.



நானும் சிரித்திருப்பேனே


சாமியைக் கண்டேனா?



என் முதல் கனவு


எனக்கு இல்லையே நினைவு



ஒலிபெருக்கி



இசை அலறும்


எரிமலை வாய்;


சொல் நொறுங்கும்


கல் ரோலர்;


சாவு எரிக்கும்


கொல்லுலைக் கோல்











Saturday 5 July, 2008

சி.சு.செல்லப்பாவின் கவிதைகள்

என்று வருவானோ

பாடாத பாட்டாக
மவுனத்துள் கம்முகிறேன்
பேசாத சொல்லாகி
சுவடிக்குள் நொறுங்குகிறேன்
உணராத பொருளாகி
சொல்லுக்குள் புழுங்குகிறேன்
ஆளாத பாண்டமாக
சேந்தியிலே மழுங்குகிறேன்.

காமிரா

போட்டோ எடுக்கையி்ல்
என்னையே பார்த்தார்கள்
போட்டோவை காட்டுகையில்
தன்னையே பார்த்தார்கள் .

Friday 4 July, 2008

சி.சு.செல்லப்பா - பிரமாண்டமும் ஒச்சமும்


சிறுகதை தொகுப்புகள் :

  1. சரசாவின் பொம்மை 1942
  2. மணல் விடு 1945
  3. அறுபது 1962
  4. சத்யாகிரகி 1964
  5. வெள்ளை 1967
  6. அழகு மயக்கம்
  7. எல்லாம் தெரியும் 1977
  8. நீர்க்குமிழி 1977
  9. பழக்க வாசனை 1977
  10. கைதியின் கர்வம் 1977
  11. செய்த கணக்கு 1977
  12. பந்தயம் 1977
  13. ஒரு பழம்

கவிதை தொகுப்பு :

  1. மாற்று இதயம் 1974
  2. நீ இன்று இருந்தால் 1974

கட்டுரை தொகுப்புகள்

  1. இலக்கிய சுவை
  2. குறித்த நேரத்தில்
  3. ஏரிக்கரை
  4. காற்று உள்ளபோதே
  5. படைப்பிலக்கியம்
  6. மாயத்தச்சன்
  7. ஊதுவத்திப்புல்
  8. தமிழில் சிறுகதை பிறக்கிறது
  9. சிறுகதை முன்னோடிகள்
  10. இலக்கிய விமர்சனம்
  11. எனது சிறுகதை பாணி
  12. பி.எஸ்.ராமய்யா சிறுகதை பாணி
  13. மணிக்கொடி சிறுகதை முதல்வர்கள்

நாவல்கள் :

  1. வாடிவாசல்
  2. ஜிவனாம்சம்
  3. சுதந்திர தாகம் - மூன்று தொகுப்புகள்

நாடகம் :

  1. முறைப்பெண்

எழுத்து பிரசுரமாக வெளிட்ட பிறர் நூல்கள்

  1. புதுக்குரல்கள்
  2. காட்டு வாத்து
  3. வழித் துணை
  4. கோடை வயல்
  5. அந்தி
  6. அமர வேதனை
  7. பசப்பல்
  8. ஷண்முக சுப்பையா கவிதைகள்
  9. நீலபத்மனாபன் கவிதைகள்
  10. பிச்சமூர்த்தி கவிதைகள்
  11. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்